நிற்பதுவே நடபதுவே பரபதுவே
நீங்களெல்லாம் சொற்பனம் தானோ
பல தோற்ற மயக்கங்களும்
சொற்பனம் தானோ பல தோற்ற மயக்கங்கலோ
கற்பபதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்பமா ய் களோ
உன்னுல் ஆழ்ந்த பொருள் இல்லையோ
அற்பமாய் எய்கள் உன்னுள் ஆழ்ந்த பொருள் இல்லையோ
வானகமே இளவெயிலே மரச்செறிவே
மீன்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சி பிழை தானோ
போனதெல்லாம் கனவினைபோல்
உதைந்தளிந்தே போனதனால்
நானும் ஒஅர் கனவோ
இந்த நிலம் ஒஅர் கனவோ
(nirpathuve)
காலம் என்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அந்த குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையும் என்றல்
மறைவதெல்லாம் காண்பதுண்டோ
நானும் ஒஅர் கனவோ
இந்த நிலம் பொய்தானோ
(nirpathuve)
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
(நல்லதோர்)
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மானிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
(நல்லதோர்)
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மணம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்...உயிர் கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவ
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ
தேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவைநேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
காவியம் பாடவா தென்றலே
புது மலர் பூத்திடும் வேலை
புதிதான பொழுது எனதாகுமா
புரியாத புதிர் தான் எதிர்காலமா
பாடும் நிலா பூங்குயில் மௌனமான வேளையில்
(kaaviyam)
புலர்ந்ததோ பொழுதிதுவோ புள்ளினத்தின் மகோற்சவம்
இவை மொழி இசைத்திடும் சுரங்களில் மனோஹர்ரம்
புது பிரபஞ்சமே புலர்ந்த நேரமே
அம்மாடி சொர்க்கம் தான் பின்னாடி வந்ததோ
கரைந்து போகும் கானல் நிறிது
(kaaviyam)
வாலி பாடல்கள்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்
புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்
கண் பொன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! (ஒரு)
காவியத் தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
மானிட ஜாதியில் தனிமனிதன் நான்
படைப்பதனால் என்பேர் இறைவன்! (ஒரு)
மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்
நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை! (ஒரு)
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
(உள்ளம் என்பது)
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை
(உள்ளம் என்பது)
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்
(உள்ளம் என்பது)
ஆசையே அலைபோலே நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே! (ஆசை)
பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)
சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)
நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்
இசைவெள்ளம் நதியாக ஓடும் அதில்
இளனெஞ்சம் படகாக ஆடும்
(நான் பாடும்)
தாழம்பூவில் காணும் பொன்வண்ணம் நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம் (2)
எங்கே நானென்று தேடட்டும் உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த (2)
அவளெந்தன் மனமேடை தவழ்கின்ற பனிவாடை (2)
காலம் கொண்டாடும் கவிதை மகள்
கவிதை மகள்
(நான் பாடும்)
நாதத்தோடு கீதம் உண்டாக தாளத்தோடு பாதம் தள்ளாட (2)
வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை வாராதிருந்தாலோ தனிமை (2)
நிழல்போலுன் குழலாட தளிர்மேனி எழுந்தாட (2)
அழகே உன் பின்னால் அன்னம் வரும்
அன்னம் வரும்
(நான் பாடும்)
|
| |||||||||||||||||||||||||||
கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக் கிளி வந்து பழம் கொடுக்க
பட்டு வண்ண சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங்கரு காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க...முத்தம் கொடுக்க
தத்தி தத்தி நடக்கையில் மயில் போலே
திக்கி திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சி கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவாய் மடி மேலே
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ
கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான் ..உறங்க வைத்தான்
ஆரிரோ ஆரிராரிராரிராரிராரிரோ
ஆராரோ ஆரிராரிராரிராரிராரஓ
ஆரிராரிராரிராரிராரோ
கண்ணன் வருவான்
கதை சொல்லுவான்
வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான்
பாட்டிசைப்பான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்
ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன...?
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)
தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)
சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)
விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)
எனக்கு பிடித்த பாடல்
அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போஅகும் வழியாய்
எந்தன் மனது அறியுமே
என்னை பிடித்த நிலவு
அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து
நோய கூட்டுமே
உதிர்வது பூக்களா ?
மனது வளர்த்த சோலையே
காதல் பூக்கள் உதிருமா ?
(எனக்கு பிடித்த )
மெல்ல நெருங்கிடும் போது
நீ தூர போகிராய்
விட்டு விளக்கும் போது
நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையாய் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன்
மொஅக்த்தில் மிதக்கிறேன்
காதலால் நானுமோர் காத்தாடி ஆகிறேன்
(எனக்கு பிடித்த )
Na na na na
aah aaah aaaah
வெள்ளி கம்பிகளை போல
ஒரு தூறல் போடுதொ
விண்ணும் மண்ணில் வந்து சேர
அது பாலம் போடுதோ
நீர் துளி நீங்கினால்
நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம்
வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய்
அன்பிலே நனைகிறாய்
மேகம் பொல எனக்குள்ளே
மொகாம் வளர்த்து கலைகிறாய்
(yenakku pidiththa)
ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா
தங்கநிலாவினை அணிந்தவா
ஆடுகிறேன் பூலோஅகையா அருளில்லையா
(oam...)
பஞ்ச பூதங்களும் முகவடிவாகும்
ஆறு காலங்களும் ஆடைகளாகும்
மலைமகள் பார்வதி உன்னுடன் நடக்க
ஏழு அடிகளும் சலங்கை படிக்க
(சுவரங்கள் )
ராகம் பார்வையே எட்டுதிசைகலே
உன் சொற்களே நவரசங்கலே
கயிலாச மலைவாசா கலையாவும் நீ
புது வாழ்வு பெறவே அருள்புரி நீ
(oam...)
மூன்று காலங்களும் உந்தன் விழிகள்
சதுர் வேதங்களும் உந்தன் மொழிகள்
கணபதி முருகனும் பிரபஞ்சம் முழுதும்
இறைவா உன்னடி பெறவே துடிக்கும்
(suvarangal)
அத்வைதமும் நீ ஆதியந்தம் நீ
நீயெங்கு இல்லை புவனம் முழுதும் நீ
(oam...)
ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினை போல்
மாய கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ - அவன்
வாய் நிறைய மண்ணை உண்டு மண்டலத்தை காட்டிய பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆரரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆரரோ
(ஆயர் )
பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க
மண்டலமே உறங்குதம்மா ஆரரோ ...
மண்டலமே உறங்குதம்மா ஆரரோ ...
(ஆயர் )
நாகபடம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடி அதில்
தாபம எல்லாம் தீர்த்து கொண்டான் தாலேலோ - அவன்
மோக நிலை கூட ஒரு யோகா நிலை போலிருக்கும்
யாரவனை தூங்க விட்டார் ஆரரோ ..
யாரவனை தூங்க விட்டார் ஆரரோ ..
(ஆயர் )
கண்ணனவன் தூங்கி விட்டால் காசினியே தூங்கி விடும்
அன்னையர் துயில் எழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகி பார்பதற்கும் போதை முத்தம் பெருவதற்கும்
கன்னியர் கோபியர் வாரீரோ ..
கன்னியர் கோபியர் வாரீரோ ..
(ஆயர் )
சொத்து சுகம் நாடார் , சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் , பொருள் நாடார், தான்பிறந்த
அன்னையையும் நாடார் , ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித்தன் நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா? (கல்)
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக்கனி ஆக்கும் உந்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுந்தன் கண்ணல்லவா
வண்ணக் கல்லல்லவா
இல்லையென்று சொல்வதுந்தன் இடையல்லவா
மின்னல் இடையல்லவா!
கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா!
காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா!
அம்பிகாபதி அணைத்த அமராவதிமங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி! என்றும் நீயே கதி! (கல்)
படம் : பாலும் பழமும்
இசை : விஸ்வநாதன் ராமமூர்த்த
வரிகள் : கண்ணதாசன்
குரல் : சௌந்தரராஜன்
போனால் போகட்டும் போடா -
இந்தபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா
போனால்......)
வந்தது தெரியும் போவது எங்கே
வாசல் நமக்கே தெரியாது
வந்தவரெல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது
வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில்ஜனனம் என்பது வரவாகும்
வரும்மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...
(போனால்..)
இரவல் தந்தவன் கேட்கின்றான்
அதை இல்லையென்றால் அவன் விடுவானா
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா
கூக்குரலாலே கிடைக்காது
இதுகோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது
அந்தக்கோட்டையில் நுழைந்தால்
திரும்பாது போனால் போகட்டும் போடா...
(போனால்.)
எலும்புக்கும் சதைக்கும் மருத்துவம் கண்டேன்
இதற்கொரு மருந்தைக் கண்டேனா
இருந்தால் அவளைத் தன்னந்தனியே
எரியும் நெருப்பில் விடுவேனா
நமக்கும் மேலே ஒருவனடா
அவன்நாலும் தெரிந்த தலைவனடா
தினம்நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...
(போனால்.)
மயக்கமா கலக்கமா..மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா)
ஏழை மனதை மாளிகையக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளைப் பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
(மயக்கமா)
படம் ஆலயமணி
பாடியவர் t.m.s
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே
நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
ஆட்டி வைத்த மிருகமின்று அடங்கிவிட்டதடா
அமைதி தெய்வம் முழு மனதில் கோயில் கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
ஆராவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தியென்று ஓய்வு கொண்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா -
நான்இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னே நல்லது கெட்டது தெரிந்ததடா
சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
Want to create a forum website in tamil. Please contact 9884305028 or Web designing company
பதிலளிநீக்குஎனக்கு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் . மிக்க நன்றி எழுத்தாளரே .
பதிலளிநீக்குஎனக்கு தமிழ் பாட்டு மிகவும் பிடிக்கும் . மிக்க நன்றி எழுத்தாளரே . WebIndia InfoTech
பதிலளிநீக்குஇவரு எப்பவும் இப்படி தான் ங்க
பதிலளிநீக்கு